Enable Javscript for better performance
2-ஆவது டெஸ்ட்: மே.இ.தீவுகள் 374- Dinamani

சுடச்சுட

    

    ஜிம்பாப்வேக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் தனது முதல் இன்னிங்ஸில் 150 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 374 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
    இரு அணிகளுக்கும் இடையே கடந்த 29-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 109.1 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் மஸாகட்ஸா அதிகபட்சமாக 147 ரன்கள் குவித்தார். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கெமர் ரோச் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள், 3-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை ஆட்டநேர முடிவில் 150 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 374 ரன்கள் எடுத்துள்ளது. தற்போதைய நிலையில் அந்த அணி, ஜிம்பாப்வேயின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 48 ரன்கள் முன்னிலையில் உள்ளது. ஷேன் டெளரிச் 75, ஜேசன் ஹோல்டர் 71 ரன்களுடன் ஆடி வருகின்றனர்.
    முன்னதாக அந்த அணியில் கிரன் பாவெல் அதிகபட்சமாக 90 ரன்கள் எடுத்திருந்தார். ஷாய் ஹோப் 40, பிரத்வெயிட் 32, தேவேந்திர பிஷு 23, ரோஸ்டன் சேஸ் 32, கைல் ஹோப் 1, பிளாக்வுட் 5 ரன்களில் வீழ்ந்திருந்தனர். ஜிம்பாப்வே தரப்பில் சிகந்தர் ராஸா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai