Enable Javscript for better performance
ஆசிய மகளிர் குத்துச்சண்டை: இன்று களம் காண்கிறார் மேரி கோம்- Dinamani

சுடச்சுட

    

    ஆசிய மகளிர் குத்துச்சண்டை: இன்று களம் காண்கிறார் மேரி கோம்

    By DIN  |   Published on : 02nd November 2017 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வியத்நாமில் நடைபெறும் ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம், 48 கிலோ எடைப் பிரிவில் வியாழக்கிழமை தனது முதல் சுற்றில் களம் காண்கிறார்.
    தொடக்க சுற்றிலிருந்து அவருக்கு 'பை' (நேரடியாக 2-ஆவது சுற்றுக்கு தகுதி பெறுதல்) வழங்கப்படாததை அடுத்து, மேரி கோம் தனது முதல் சுற்றில் வியத்நாமைச் சேர்ந்த தீம் தி டிரின் கியுவை சந்திக்கிறார். மகளிர் 54 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சிக்ஷா தனது முதல் சுற்றில் மங்கோலியாவின் ஒயுன் எர்டென் நெர்குயை எதிர்கொள்கிறார்.
    81 கிலோவுக்கு அதிகமான எடைப் பிரிவில் பங்கேற்கும் இந்தியாவின் சீமா பூனியா அரையிறுதிக்கு நேரடியாக தகுதிபெற்று, வரும் 7-ஆம் தேதி நடைபெறும் மோதலில் உஸ்பெகிஸ்தானின் குஸல் இஸ்மாடோவாவை சந்திக்கிறார். இதனிடையே, 64 கிலோ எடைப் பிரிவில் முதல் முறையாக களம் காணும் இந்தியாவின் சரிதா தேவிக்கு முதல் சுற்றிலிருந்து 'பை' அளிக்கப்பட்டதை அடுத்து வரும் 5-ஆம் தேதி காலிறுதியில் உஸ்பெகிஸ்தானின் மஃப்துனாகோன் மெலிவாவுடன் மோதுகிறார். அதேபோல் 75 கிலோ எடைப் பிரிவில் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்ற சவீதி பூரா, அதில் சீனாவின் லி கியானை சந்திக்கிறார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள முதல் சுற்றுகளில் 57 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சோனியா லேதர், ஜப்பானின் கானா குரோகியையும், 81 கிலோ எடைப் பிரிவில் பூஜா ராணி, சீனாவின் யாங் ஸியாவ்லியையும் சந்திக்கின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai