Enable Javscript for better performance
சீனியர் தேசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்: சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    சீனியர் தேசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்: சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த் பங்கேற்பு

    By DIN  |   Published on : 02nd November 2017 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sindu

    சீனியர் தேசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
    இதில், சாய்னா நெவால், பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பிரபல போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். சமீபத்திய டென்மார்க் ஓபன் உள்பட இந்த ஆண்டில் 4 பட்டங்களை வென்றுள்ள ஸ்ரீகாந்த், இப்போட்டியிலும் பட்டத்தை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது.
    மகளிர் ஒற்றையர் பிரிவில் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் சாய்னா-சிந்து ஆகியோர் ஒரு கட்டத்தில் மோத உள்ளனர்.
    இந்தப் போட்டியில் ஸ்ரீகாந்த், ஹெச்.எஸ்.பிரணாய், அஜய் ஜெயராம், சாய் பிரணீத், சமீர் வர்மா, செளரவ் வர்மா, காஷ்யப் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளனர். மகளிர் பிரிவில் சாய்னா, சிந்து, ரிதுபர்னா, அனுரா ஆகியோர் அதேபோல் தகுதிபெற்றுள்ளனர்.
    ஆடவர் இரட்டையரில், சாத்விக்சாய்ராஜ்-சிரக் ஷெட்டி, மானு அத்ரி-ரெட்டி, அர்ஜூன்-ராமசந்திரன் ஆகிய ஜோடிகள் நேரடியாக காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. மகளிர் இரட்டையரில் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி உள்ளிட்ட 3 ஜோடிகள் அவ்வாறு தகுதிபெற்றுள்ளன. கலப்பு இரட்டையரில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா-சிக்கி ரெட்டி உள்ளிட்ட 2 ஜோடிகளும் அதேபோல் தகுதிபெற்றுள்ளன.
    மொத்தம் ரூ.60 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் போட்டியில் 29 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 400-க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இப்போட்டி வரும் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai