Enable Javscript for better performance
துப்பாக்கி சுடுதல்: ஷாஸார், பூஜாவுக்கு தங்கம்- Dinamani

சுடச்சுட

    

    காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஷாஸார் ரிஸ்வி, பூஜா கட்கர் ஆகியோர் புதன்கிழமை தங்கப் பதக்கம் வென்றனர்.
    இதில் இந்திய வீரர் ஷாஸார் ரிஸ்வி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 240.7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். அதே பிரிவில் இந்தியாவின் ஓம்கார் சிங் 236 புள்ளிகளுடன் வெள்ளியும், ஜிது ராய் 214.1 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர்.
    இதனிடையே, மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை பூஜா கட்கர் 249.8 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்தியரான அஞ்சும் முட்கில் 248.7 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தைப் பிடித்தார். சிங்ப்பூரைச் சேர்ந்த மார்டினா லின்ட்சே வெலோúஸா 224.8 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார். அதேபோல், ஆடவருக்கான ஸ்கீட் பிரிவில் இந்தியாவின் மைராஜ் அகமது கான், அங்கத் வீர் சிங் பாஜ்வா ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
    காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டி தொடங்கி 2 நாள்கள் ஆகியுள்ள நிலையில், இந்தியா இதுவரை இரு தங்கம், இரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களை வென்றுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai