Enable Javscript for better performance
தேசிய அளவிலான யு-17 செஸ் போட்டி: கோவை சிறுமி பிரியங்கா சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    

    தேசிய அளவிலான யு-17 செஸ் போட்டி: கோவை சிறுமி பிரியங்கா சாம்பியன்

    By DIN  |   Published on : 02nd November 2017 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    champion

    கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற தேசிய செஸ் போட்டி நிறைவு விழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுடன் தமிழ்நாடு செஸ் சங்கத் தலைவர் ம.மாணிக்கம்,

    கோவையில் நடைபெற்ற 17 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-17) தேசிய அளவிலான செஸ் போட்டியின் மகளிர் பிரிவில் கோவையைச் சேர்ந்த கே.பிரியங்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
    டாக்டர் என்.மகாலிங்கம் செஸ் அகாதமி சார்பில் 28-ஆவது ஆண்டாக நடைபெற்ற இப்போட்டியின் பொதுப் பிரிவில் தெலங்கானாவைச் சேர்ந்த ராஜா ரித்விக் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். அதே மாநிலத்தைச் சேர்ந்த எரிகைசி அர்ஜுன் அந்தப் பிரிவில் 2-ஆம் இடமும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மித்ரபா குஹா 3-ஆம் இடைத்தையும் பிடித்தனர்.
    மகளிர் பிரிவில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அர்பிதா முகர்ஜி 2-ஆவது இடத்தையும், சண்டீகரைச் சேர்ந்த தாரிணி கோயல் 3-ஆவது இடைத்தையும் பிடித்தனர்.
    பொது மற்றும் மகளிர் பிரிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தவர்கள், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா சார்பில் போட்டியிடுவார்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai