Enable Javscript for better performance
பாரீஸ் மாஸ்டர்ஸ்: நான்காவது சுற்றில் நடால்- Dinamani

சுடச்சுட

    
    nadal

    'பேக் ஹேண்ட்' ஷாட்டில் சங் ஹியோனுக்கு பந்தை திருப்பும் நடால்.

    பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ரஃபேல் நடால் 4-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினார்.
    முன்னதாக, ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-ஆவது சுற்றில் தென் கொரியாவின் சங் ஹியோனை எதிர்கொண்ட நடால், அதில் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
    இதனிடையே, மற்றொரு 3-ஆவது சுற்றில் ஸ்பெயினின் ஃபெலிஸியானோ லோபஸை 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் பிரான்ஸின் லூகாஸ் புய்லே. போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருந்த ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ùஸவரேவ் 6-3, 2-6, 2-6 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் ராபின் ஹேஸிடம் வீழ்ந்தார்.
    மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 9-ஆவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் ஜான் இஸ்னர் 7-6(2), 6-7(13), 6-3 என்ற செட் கணக்கில் ஆர்ஜென்டீனாவின் டியேகோ ஷ்வார்ட்ஸ்மெனை வீழ்த்தினார். போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் 6-4, 6-7(7), 6-4 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் பீட்டர் கோஜோவ்சிக்கை வீழ்த்தினார்.
    பிரான்ஸின் நிகோலஸ் மஹட் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருந்த ஸ்பெயினின் பாப்லோ கரீனோ பஸ்டாவை வீழ்த்தினார். அடுத்த சுற்றில் செர்பியாவின் ஃபிலிப் கிரஜினோவிச்சை சந்திக்கிறார் நிகோலஸ்.
    இதர ஆட்டங்களில் ஸ்பெயினின் ஃபெர்னான்டோ வெர்டாஸ்கோ 5-7, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனையும், உருகுவேயின் பாப்லோ கியூவாஸ் 6-7(7), 7-6(1), 6-2 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ரமோஸ் வினோலஸையும் வீழ்த்தினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai