Enable Javscript for better performance
ஐஎஸ்எல்: முதல் ஆட்டம் இடமாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    நான்காவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளதை அடுத்து, முதல் ஆட்டம் கேரள மாநிலம் கொச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    முன்னதாக, அந்த சீசனின் தொடக்க ஆட்டமான, கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி-அட்லெடிகோ டீ கொல்கத்தா அணிகள் மோதும் ஆட்டம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது அந்த ஆட்டம் கொச்சியில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக ஐஎஸ்எல் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "4-ஆவது சீசன் ஐஎஸ்எல் போட்டியின் இறுதி ஆட்டம் கொல்கத்தா நகரில் அடுத்த ஆண்டு மார்ச் 17-ஆம் தேதி நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கொல்கத்தாவில், 17 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-17) உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு கிடைத்த பலத்த வரவேற்பை அடுத்து இந்த இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    கேரள முதல்வருக்கு அழைப்பு: இதனிடையே, கொச்சியில் நடைபெறவுள்ள ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், கேரள பிளாஸ்டர்ஸ் அணி உரிமையாளர்களில் ஒருவருமான சச்சின் டெண்டுல்கர் அழைப்பு விடுத்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai