Enable Javscript for better performance
காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல்: ககனுக்கு வெள்ளி- Dinamani

சுடச்சுட

    
    kahan

    காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ககன் நரங் 50 மீட்டர் ரைஃபிள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மகளிருக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் அன்னு ராஜ் சிங் வெண்கலம் தட்டிச் சென்றார்.
    கடந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு முதல் முறையாக முக்கியமான போட்டியில் பங்கேற்றுள்ள ககன் நரங், இறுதிச்சுற்றில் 246.3 புள்ளிகளைப் பெற்று 2-ஆவது இடம் பிடித்தார்.
    வெற்றிக்குப் பிறகு பேசிய ககன் நரங், "காற்று சற்று அதிகமாக இருந்ததால், இலக்கை கவனமாக குறி வைக்க வேண்டியிருந்தது. சரியான நேரத்தில் இலக்கை சுட வேண்டும் என்தால் மிகவும் பொறுமை காக்க வேண்டியிருந்தது. இந்தப் போட்டியை அடுத்த ஆண்டு நடைபெறும் காமன்வெல்த் போட்டிக்கான முன்னோட்டமாகக் காண்கிறேன்" என்று கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai