Enable Javscript for better performance
கோலியின் "வாக்கி-டாக்கி" விவகாரம்: ஐசிசி முற்றுப்புள்ளி- Dinamani

சுடச்சுட

    

    கோலியின் "வாக்கி-டாக்கி" விவகாரம்: ஐசிசி முற்றுப்புள்ளி

    By DIN  |   Published on : 03rd November 2017 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kholi

    நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தின்போது இந்திய கேப்டன் விராட் கோலி வாக்கி-டாக்கி கருவியை பயன்படுத்தியது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு ஐசிசி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
    தில்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தின்போது, பெவிலியனில் சக இந்திய வீரர்களுடன் அமர்ந்திருந்த கோலி, வாக்கி-டாக்கி கருவியில் எவருடனோ பேசும் காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
    வாக்கி-டாக்கி பயன்படுத்தியதன் மூலம் கோலி, ஐசிசி விதிகளை மீறியதாகக் கூறி சம்பந்தப்பட்ட காட்சியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்தன. இந்நிலையில், முறையான அனுமதி பெற்றே கோலி அந்தக் கருவியைப் பயன்படுத்தியதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
    இதுகுறித்து ஐசிசி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
    ஐசிசி விதிகளின்படி, ஓய்வு அறைப் பகுதியில் செல்லிடப்பேசி பயன்படுத்தக் கூடாது. வீரர்களும், உதவிப் பணியாளர்களும் வாக்கி-டாக்கி பயன்படுத்த அனுமதி உண்டு. மைதானத்தில் வீரர்கள் அமர்ந்திருக்கும் "டகெளட்" பகுதிக்கும், ஓய்வு அறைக்கும் இடையே உரையாடுவதற்காக உதவிப் பணியாளர்கள் வாக்கி-டாக்கியைப் பயன்படுத்துவார்கள்.
    அந்த வகையிலேயே கோலியும், மைதானத்தில் இருந்த ஐசிசியின் ஊழல் தடுப்பு அமைப்பு (ஏசியு)மேலாளரிடம் உரிய அனுமதி பெற்று வாக்கி-டாக்கி கருவியைப் பயன்படுத்தினார் என்று அந்த அதிகாரி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai