Enable Javscript for better performance
பாரீஸ் மாஸ்டர்ஸ் டெல் போட்ரோ காலிறுதிக்கு முன்னேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    பாரீஸ் மாஸ்டர்ஸ் டெல் போட்ரோ காலிறுதிக்கு முன்னேற்றம்

    By DIN  |   Published on : 03rd November 2017 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    del

    பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோ காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.
    முன்னதாக தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ராபின் ஹாஸியை எதிர்கொண்ட டெல் போட்ரோ அதில் 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்பெயினின் ஃபெர்னான்டோ வெர்டாஸ்கோ 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்த ஆஸ்திரியாவின் டொமினிக் தீமிற்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார்.
    அதேபோல், செர்பியாவின் ஃபிலிப் கிராஜினோவிச் 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் நிகோலஸ் மஹட்டை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இதனிடையே, 3-ஆவது சுற்று ஒன்றில் போட்டித் தரவரிசையில் 14-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் பெளதிஸ்டா அகுட் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் ஜெரிமி சார்டியை வீழ்த்தினார்.
    இதர 3-ஆவது சுற்றுகளில் குரோஷியாவின் மரின் சிலிச் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான போர்னா கோரிச்சை வீழ்த்தினார். பெல்ஜியத்தின் டேவிட் காஃபின் 6-2, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் அட்ரியான் மனாரினோவை வென்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai