கேரள முதல்வரைச் சந்தித்தார் சச்சின்! கொல்கத்தாவில் ஐஎஸ்எல் இறுதிப் போட்டி!

இறுதி ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இதனால் முதல் ஆட்டம் கேரளாவில் நடைபெறவுள்ளது...
கேரள முதல்வரைச் சந்தித்தார் சச்சின்! கொல்கத்தாவில் ஐஎஸ்எல் இறுதிப் போட்டி!

நான்காவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இதனால் முதல் ஆட்டம் கேரளாவில் நடைபெறவுள்ளது.

இந்த ஐஎஸ்எல் சீசனின் தொடக்க ஆட்டமான, கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி-அட்லெடிகோ டீ கொல்கத்தா அணிகள் மோதும் ஆட்டம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது அந்த ஆட்டம் கொச்சியில் வரும் 17-ம் தேதி நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டி கொல்கத்தாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் முதல் ஆட்டம் கேரள மாநிலம் கொச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஐஎஸ்எல் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "4-ஆவது சீசன் ஐஎஸ்எல் போட்டியின் இறுதி ஆட்டம் கொல்கத்தா நகரில் அடுத்த ஆண்டு மார்ச் 17-ஆம் தேதி நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில், 17 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-17) உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு கிடைத்த பலத்த வரவேற்பை அடுத்து இந்த இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே, கொச்சியில் நடைபெறவுள்ள ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், கேரள பிளாஸ்டர்ஸ் அணி உரிமையாளர்களில் ஒருவருமான சச்சின் டெண்டுல்கர் அழைப்பு விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com