Enable Javscript for better performance
ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிச்சுற்றில் இந்தியா-சீனா பலப்பரீட்சை- Dinamani

சுடச்சுட

    

    ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிச்சுற்றில் இந்தியா-சீனா பலப்பரீட்சை

    By DIN  |   Published on : 04th November 2017 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    hocky

    கோல் அடித்த மகிழ்ச்சியில் இந்திய வீராங்கனைகள்.

    மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா-சீனா அணிகள் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன.
    முன்னதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சாம்பியனான ஜப்பானை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குர்ஜித் கெளர் 2 கோல்களும், நவ்ஜோத் கெளர், லால்ரெம்சியாமி ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தனர்.
    ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இந்தியாவுக்கு அடுத்தடுத்து பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. அவ்வாறு 7-ஆவது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை அருமையான கோலாக மாற்றினார் டிராக் ஃப்ளிக்கர் குர்ஜித் கெளர். இதனால் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
    அடுத்த 2 நிமிடத்திலேயே கோல் எண்ணிக்கையை 2-ஆக அதிகரித்தார் அணியின் நவ்ஜோத் கெளர். அவர், 9-ஆவது நிமிடத்தில் முன்கள வீராங்கனை வந்தனா கட்டாரியாவின் உதவியுடன் அற்புதமான ஃபீல்டு கோல் அடித்தார். அந்த நிமிடத்திலேயே இந்தியாவுக்கு மீண்டும் ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதை தவறவிடாமல் கோலாக மாற்றிய குர்ஜித் கெளர், அணியை 3-0 என முன்னிலைப்படுத்தினார். மறுமுனையில் தடுப்பாட்டத்தில் தடுமாறிவந்த ஜப்பான் அணி, தாக்குதல் ஆட்டத்தை ஆக்ரோஷத்துடன் தொடங்கியது.
    அதன் பலனாக 17-ஆவது நிமிடத்தில் அந்த அணியின் ஷிஹோ ட்சுஜி ஒரு கோல் அடித்து ஜப்பானின் கணக்கை தொடக்கி வைத்தார். இந்தியாவின் தடுப்பாட்டத்துக்கான அடுத்த சோதனையாக, 28-ஆவது நிமிடத்தில் ஜப்பான் வீராங்கனை யுய் இஷிபாஷி 'ஃபீல்டு' கோல் ஒன்றை அடித்து இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார்.
    எனினும், முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் இந்தியா 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் மீண்டும் இந்தியாவின் கை ஓங்கியது. 38-ஆவது நிமிடத்தில் லால்ரெம்சியாமி ஃபீல்டு கோல் அடித்தார்.
    தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் ஜப்பான் அணிக்கு தொடர்ச்சியாக பெனால்டி வாய்ப்புகள் கிடைத்தபோதிலும், இந்தியாவின் சவிதா அதை அரண்போல் தடுத்தார். இறுதியில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது.
    சீனா வெற்றி: இதனிடையே, மற்றொரு அரையிறுதியில் சீனா 3-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai