Enable Javscript for better performance
ஆசிய மகளிர் குத்துச்சண்டை: காலிறுதியில் சோனியா, நீரஜ்- Dinamani

சுடச்சுட

    

    ஆசிய மகளிர் குத்துச்சண்டை: காலிறுதியில் சோனியா, நீரஜ்

    By DIN  |   Published on : 04th November 2017 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வியத்நாமில் நடைபெற்று வரும் ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் சோனியா லேதர், நீரஜ் ஆகியோர் தங்களது எடைப் பிரிவில் காலிறுதிச் சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.
    இதில், 57 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றுள்ள சோனியா லேதர் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பானின் குரோகி கானாவை வீழ்த்தினார். லேதர் தனது அடுத்த சுற்றில் சீனாவின் யின் ஜுன்ஹுவாவுடன் சனிக்கிழமை மோதுகிறார். 
    இதேபோல், 51 கிலோ எடைப் பிரிவில் களம் கண்டுள்ள நீரஜ், மியான்மர் வீராங்கனை நாலி நாலியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். ஹரியாணாவைச் சேர்ந்த நீரஜ், ஆசிய மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். நீரஜ் தனது காலிறுதியில் தென் கொரியாவின் பாங் சோல் மியை எதிர்கொள்கிறார். இதனிடையே, 81 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் பூஜா ராணி தனது முதல் சுற்றில் சீனாவின் யாங் ஸியாவ்லியிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai