Enable Javscript for better performance
களத்தில் நுழைந்த கார்- Dinamani

சுடச்சுட

    
    ground

    ஆடுகளத்தில் அத்துமீறி நுழைந்த கார்.

    தில்லியில் பாலம் விமானப் படை மைதானத்தில் தில்லி-உத்தரப் பிரதேச அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தின்போது, ஒருவர் ஆடுகளத்துக்குள்ளாக காரை ஓட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பாதுகாப்பு வளையங்களை மீறியபடி அந்த நபர் காரை ஓட்டி வந்ததைக் கண்ட வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த ஆட்டத்தில் கெளதம் கம்பீர், இஷாந்த் சர்மா, ரிஷப் பந்த் ஆகிய இந்திய அணி வீரர்களும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
    உத்தரப் பிரதேச பதிவெண் கொண்ட அந்த காரை கிரிஷ் சர்மா என்ற நபர் ஓட்டி வந்துள்ளார். மைதானத்தின் பிரதான வாயிலில் பணியில் இருக்க வேண்டிய காவலர், அந்த நேரத்தில் அங்கு இல்லாமல் போனதை அடுத்து, கிரிஷ் சர்மா காரை மைதானத்துக்கு ஓட்டி வந்துள்ளார். பார்க்கிங் பகுதிக்குச் செல்வதற்கு பதிலாக அவர் மைதானத்துக்குள் புகுந்துள்ளார். சம்பவத்தை அடுத்து தில்லி போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு அச்சுறுத்தலாக நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று பிசிசிஐ தலைவர் (பொறுப்பு) சி.கே.கன்னா கூறினார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai