Enable Javscript for better performance
டி20 தொடரை கைப்பற்றுமா இந்தியா?: இன்று நியூஸி.க்கு எதிரான 2-ஆவது ஆட்டம்- Dinamani

சுடச்சுட

    

    டி20 தொடரை கைப்பற்றுமா இந்தியா?: இன்று நியூஸி.க்கு எதிரான 2-ஆவது ஆட்டம்

    By DIN  |   Published on : 04th November 2017 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    newsland

    பயிற்சியில் நியூஸிலாந்து வீரர் மார்ட்டின் கப்டில்.

    இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 2-ஆவது ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
    மொத்தம் 3 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-ஆவது ஆட்டத்திலும் வெற்றி பெறும் பட்சத்தில், கடந்த 5 ஆண்டுகளில் டி20 தொடரை இந்தியா கைப்பற்றுவது 3-ஆவது முறையாக இருக்கும்.
    இந்திய அணியைப் பொருத்த வரையில், முதல் ஆட்டத்தில் 53 ரன்கள் வித்தியாசத்தில் கண்ட வெற்றி, அணி வீரர்களுக்கு உத்வேகத்தை அளித்திருக்கும். எனவே, இந்த ஆட்டத்திலும் வெற்றி கண்டு தொடரை கைப்பற்றும் முனைப்பில் களம் காண்பார்கள்.
    அணியின் பேட்டிங்கிற்கு தவன், ரோஹித் கூட்டணி அருமையான தொடக்கத்தை தரும் என நம்பலாம். முதல் ஆட்டத்தில் இந்தக் கூட்டணி 158 ரன்களை குவித்து அணியின் ஸ்கோரை பலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மிடில் ஆர்டரில் கேப்டன் கோலி, எம்.எஸ்.தோனி பலம் சேர்க்கின்றனர். கடந்த ஆட்டத்தில் டக் அவுட் ஆன ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்டியா, இந்த ஆட்டத்தில் மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    அணியின் பந்துவீச்சை கணக்கில் கொண்டால் பூம்ரா, புவனேஸ்வர் வேகம் காட்டி மிரட்ட வருகின்றனர். சுழற்பந்துவீச்சில் யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் பலம் சேர்க்கின்றனர்.
    நியூஸிலாந்து அணியை கணக்கில் கொண்டால், ஒருநாள் தொடரை இந்தியாவிடம் இழந்துவிட்டதால், டி20 தொடரை தக்க வைக்க அந்த அணி கடுமையாக முயற்சிக்கும். 
    முதல் ஆட்டத்தில் சொற்ப ரன்களில் வீழ்ந்த அணியின் பேட்ஸ்மேன்கள் மீண்டு வருவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
    கடந்த ஆட்டத்தில் முக்கியமான தருணங்களில் ரோஹித் மற்றும் கோலியின் கேட்சுகளை நியூஸிலாந்து ஃபீல்டர்கள் தவறவிட்டது அந்த அணிக்கு பெரும் பாதிப்பாக இருந்தது. இந்த முறை ஃபீல்டிங்கில் அந்த அணி கவனமுடன் இருக்கும். பந்துவீச்சில் சேன்ட்னர், செளதி, சோதி ஆகியோர் பலம் சேர்ப்பார்கள்.
    அணி விவரம்
    இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவன், எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா, ஜஸ்பிரீத் பூம்ரா, யுவேந்திர சாஹல், ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், முகமது சிராஜ், மணீஷ் பாண்டே, , அக்ஸர் படேல், கே.எல்.ராகுல்.
    நியூஸிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), மார்ட்டின் கப்டில், மாட் ஹென்ரி, டாம் லதாம், டாட் ஆஸ்லே, டிரென்ட் போல்ட், டாம் புரூஸ், காலின் டி கிரான்ட்ஹோம், ஹென்ரி நிகோலஸ், ஆடம் மில்னே, காலின் மன்ரோ, கிளென் பிலிப்ஸ், மிட்செல் சேன்ட்னர், ஐஷ் சோதி, டிம் செளதி.
    ராஜ்கோட்டில் இந்தியா...
    ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறும் 2-ஆவது சர்வதேச டி20 ஆட்டம் இதுவாகும். முதல் ஆட்டம், கடந்த 2013-ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடைபெற்றது. அதில் இந்தியா வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.
    ஆட்ட நேரம்: இரவு 7 மணி. நேரடி ஒளிபரப்பு:
    ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai