Enable Javscript for better performance
டேபிள் டென்னிஸ் சூப்பர் லீக்: சென்னையில் 24-இல் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    டேபிள் டென்னிஸ் சூப்பர் லீக்: சென்னையில் 24-இல் தொடக்கம்

    By DIN  |   Published on : 04th November 2017 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    டேபிள் டென்னில் சூப்பர் லீக் போட்டி முதல் முறையாக சென்னையில் வரும் 24-ஆம் தொடங்கி, 26-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளது.
    தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கத்தின் ஒத்துழைப்புடன், இன்டஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒருங்கிணைக்கும் இந்தப் போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான வீரர்கள் ஏல முறையில் தேர்வு செய்யப்பட்டனர். 
    ஆடவர், மகளிர், ஜூனியர் ஆடவர், ஜூனியர் மகளிர் உள்பட 6 பிரிவுகளில் வீரர், வீராங்கனைகள் ஒவ்வொரு அணிக்குமாக தேர்வு செய்யப்பட்டனர். இதில், பிரபாகரன் என்ற வீரர் அதிகபட்சமாக ரூ.52,500-க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
    8 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. அவை ஒவ்வொன்றும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். அரையிறுதியில் வெற்றி பெறும் 2 அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.
    முன்னதாக, இந்த டேபிள் டென்னிஸ் லீக் போட்டி மும்பையில் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது சென்னையில் நடத்தப்படுகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai