Enable Javscript for better performance
தேசிய பாட்மிண்டன்: செளரவ் வர்மா விலகல்- Dinamani

சுடச்சுட

    

    கணுக்கால் காயத்தில் இருந்து மீண்டு வரும் பாட்மிண்டன் வீரர் செளரவ் வர்மா, சீனியர் தேசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
    நடப்புச் சாம்பியனான அவர், இதுகுறித்து வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஜப்பான் ஓபன் போட்டிக்குப் பிறகு பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு இந்த வாரத்தில் தான் ஆடுகளத்தில் பயிற்சியை தொடங்கினேன். எனினும், காயத்தின் பாதிப்பிலிருந்து முழுமையாக மீளவில்லை என்பதால், சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகுகிறேன்.
    இரு வாரங்கள் ஓய்வுக்குப் பிறகு சீன ஓபனிலும், அதைத் தொடர்ந்து ஹாங்காங் ஓபனிலும் பங்கேற்க உள்ளேன் என்று செளரவ் வர்மா கூறினார். சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி வரும் 14-ஆம் தேதி தொடங்குகிறது.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai