Enable Javscript for better performance
ஆசிய கோப்பை ஹாக்கி: பட்டம் வெல்லுமா இந்தியா?- Dinamani

சுடச்சுட

    

    மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பட்டத்தை வெல்வதற்கான இறுதி ஆட்டத்தில் இந்தியா-சீனா அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.
    இந்தப் போட்டியில் 'குரூப்' சுற்றுகள், காலிறுதி என எதிலும் தோல்வியின்றி சிறப்பான ஆட்டத்தை இந்தியா வெளிப்படுத்தி வந்துள்ளது. அரையிறுதியில் நடப்புச் சாம்பியனான ஜப்பானை வீழ்த்தியது இந்தியாவுக்கான மிகப்பெரிய உத்வேகமாக இருக்கும்.
    அதேவேளையில், இறுதிஆட்டத்தில் தன்னை சந்திக்கும் சீனாவையும், குரூப் சுற்றில் 4-1 என்ற கோல் கணக்கில் வென்றுள்ளது இந்தியா. எனவே, இந்திய அணி நம்பிக்கையுடன் இறுதி ஆட்டத்தை எதிர்கொள்ளும்.
    இறுதிஆட்டம் குறித்து இந்திய கேப்டன் ராணி கூறியதாவது:
    இந்தப் போட்டியில் வெற்றி பெற்று, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதிபெற எண்ணுகிறோம். முன்னதாக, ஆடவர் அணி ஆசிய கோப்பையை வென்றது எங்களுக்கான உத்வேகமாக உள்ளது. இது எங்களுக்கான தருணம். உற்சாகத்துடன் இறுதி ஆட்டத்துக்கு தயாராகியுள்ளோம்.
    ஒவ்வொரு வீராங்கனையுமே தங்களது பணியை திறம்படச் செய்ததே அணியின் இந்த முன்னேற்றத்துக்குக் காரணம். சீன அணியை முன்பு வீழ்த்தியிருந்தாலும், இறுதிச்சுற்றில் அவர்களை குறைத்து மதிப்பிட முடியாது. ஆட்ட வியூகத்தை முறையாக பின்பற்றி வெற்றி பெற முயலுவோம் என்று ராணி கூறினார். கடந்த ஆண்டு ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் இறுதிஆட்டத்தில் இந்தியா 2-1 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. ஆட்டநேரம்: மாலை 6.30
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai