Enable Javscript for better performance
ஆசிய மகளிர் குத்துச்சண்டை: அரையிறுதியில் மேரி கோம்- Dinamani

சுடச்சுட

    
    meri-kem

    வியத்நாமில் நடைபெற்று வரும் ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
    அவருடன், இதர இந்திய வீராங்கனைகளான சிக்ஷா மற்றும் பிரியங்கா செளதரியும் அந்த பதக்கச் சுற்றுக்கு முன்னேறினர்.
    இதில், 48 கிலோ ஃப்ளைவெயிட் பிரிவின் காலிறுதியில் களம் கண்ட மேரி கோம், அதில் சீன தைபேவின் மெங் சியே பின்னை வீழ்த்தினார். இதையடுத்து தனது அரையிறுதியில் ஜப்பானின் சுபாசா கொமுராவை எதிர்கொள்கிறார் மேரி கோம்.
    ரியோ ஒலிம்பிக் வாய்ப்பை தவறவிட்ட மேரி கோம், கடந்த ஓராண்டுக்கும் மேலான காலகட்டத்தில் வெல்ல இருக்கும் முதல் பதக்கம் இதுவாகும். ஆசிய குத்துச்சண்டையில் அவர் இதுவரை 4 தங்கம், ஒரு வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
    இதேபோல், 54 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடும் இந்திய வீராங்கனை சிக்ஷா தனது காலிறுதியில் உஸ்பெகிஸ்தானின் ஃபெராங்கிஸ் கோஷிமோவாவை வீழ்த்தினார். அவர் தனது அரையிறுதியில் சீன தைபேவின் லின் யு டிங்குடன் மோதுகிறார்.
    60 கிலோ எடைப் பிரிவுக்கான காலிறுதியில் இலங்கையின் துலஞ்சானி லங்கபுரயலாகேவை வென்று அரையிறுதிக்கு தகுதிபெற்றார் இந்தியாவின் பிரியங்கா. இதனிடையே, 75 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றிருந்த சவீதி பூரா, சீனாவின் லீ கியானிடம் வீழ்ந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.
    தூதராக மேரி கோம்: இதனிடையே, குவாஹாட்டியில் வரும் 19 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஏஐபிஏ மகளிர் இளையோர் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டிக்கான தூதராக நியமிக்கப்பட்டு மேரி கோம் கெளரவிக்கப்பட்டுள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai