Enable Javscript for better performance
ஊக்கமருத்து சர்ச்சை: பெரு கால்பந்து அணி கேப்டன் இடைநீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஊக்கமருத்து சர்ச்சை: பெரு கால்பந்து அணி கேப்டன் இடைநீக்கம்

    By DIN  |   Published on : 05th November 2017 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    bavle

    ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், பெரு கால்பந்து அணி கேப்டன் பாவ்லோ கியுரெரோ இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் அவர் தோல்வி அடைந்ததை அடுத்து, அவரை 30 நாள்களுக்கு இடைநீக்கம் செய்து ஃபிஃபா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
    இதுதொடர்பாக பெரு கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
    கியுரெரோ ஊக்கமருந்து பயன்படுத்தியதாக, உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தகுதிச் சுற்றில் அர்ஜென்டீனா அணிக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு புகார் எழுந்தது. 
    இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர் ஊக்க மருத்து பயன்படுத்தியதாக தெரிய வந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தடை செய்யப்பட்ட எந்த மருந்தை அவர் பயன்படுத்தினார் என்று அதில் குறிப்பிடப்படவில்லை.
    ஃபிஃபா கூட்டமைப்பின் முடிவு உறுதிசெய்யப்படும் பட்சத்தில், வரும் 11 மற்றும் 16-ஆம் தேதிகளில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள உலகக் கோப்பை பிளேஆஃப் ஆட்டங்களில் கியுரெரோவால் பங்கேற்க முடியாது.
    இதனிடையே, கியுரெரோ ஊக்கமருந்து பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் அவரிடம் இருக்கும் பட்சத்தில், அதை அவர் சமர்ப்பிக்கலாம் என்று பிரேஸில் கால்பந்து கூட்டமைப்பின் ஊக்கமருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai