Enable Javscript for better performance
எலைட் டிராபி டென்னிஸ்: இறுதிச்சுற்றில் கோகோ-ஜூலியா- Dinamani

சுடச்சுட

    
    koko

    ஆஷ்லேவுக்கு எதிராக ஆக்ரோஷமாக பந்தை திருப்பும் கோகோ.

    எலைட் டிராபி டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் கோகோ வான்டெவெக்-ஜெர்மனியின் ஜூலியா ஜியார்ஜஸ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.
    சீனாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், முன்னதாக நடைபெற்ற அரையிறுதி ஒன்றில் போட்டித்தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் கோகோ வான்டெவெக்கும், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்ட்டியும் மோதினர். இருவருக்கும் இடையே விறுவிறுப்பாக ஒரு மணி நேரம் 2 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் கோகோ 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
    அதேபோல், மற்றொரு அரையிறுதியில் ஜெர்மனியின் ஜூலியா ஜியார்ஜஸ் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் லாத்வியாவின் அனஸ்தாஸிஜா செவஸ்டோவாவை வீழ்த்தினார். ஜூலியா இறுதிச்சுற்றுக்கு 
    முன்னேறிய இந்த ஆட்டம், ஒருமணி நேரம் 11 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai