Enable Javscript for better performance
டேபிள் டென்னிஸ்: சரத்-சத்தியன் ஜோடிக்கு வெண்கலம்- Dinamani

சுடச்சுட

    

    பெல்ஜியம் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல்- சத்தியன் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது.
    முன்னதாக நடைபெற்ற அரையிறுதியில் சரத்-சத்தியன் ஜோடி, 2-4 என்ற கணக்கில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருந்த ஜெர்மனியின் பேர்டரிக் ஃபிரான்ஸிஸ்கா-ரிகார்டோ வால்தர் ஜோடியிடம் வீழ்ந்தது. 
    இந்த ஆட்டத்தில், முதல் செட்டை 7-11 என்ற கணக்கில் இழந்த இந்திய ஜோடி, அடுத்த இரண்டு செட்களை 11-7, 11-5 என கைப்பற்றி முன்னேறியது. இருப்பினும், கடைசி இரு செட்களை 5-11, 5-11 என இழந்தது.
    இதேபோல், ஆடவர் ஒற்றையர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சனில் ஷெட்டி 1-4 என்ற கணக்கில் ஜெர்மனியின் ரிகார்டோ வால்தரிடம் தோற்றார். 
    இந்த ஆட்டத்தில் முதல் மற்றும் கடைசி இரு செட்கள் (7-11, 3-11 & 7-11, 6-11) என ரிகார்டோ வசமாக, 3-ஆவது செட் மட்டும் (11-5) சனிலுக்கு கிடைத்தது.
    இதனிடையே, மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மனிகா பத்ரா-மெளமா தாஸ் ஜோடி 1-3 என்ற கணக்கில் தைபேவின் சியென் ஸு செங்-சிங் யின் லியு இணையிடம் வீழ்ந்தது.
    இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 11-6 என தைபே ஜோடி கைப்பற்ற, 2-ஆவது செட்டை 11-5 என இந்திய ஜோடி வென்றது. எனினும், அடுத்த இரு செட்களை 11-9, 12-10 என தைபே ஜோடி சொந்தமாக்கியது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai