Enable Javscript for better performance
பாரீஸ் மாஸ்டர்ஸ்: இறுதிச்சுற்றில் கிரஜினோவிச்- Dinamani

சுடச்சுட

    
    tennis

    பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றுக்கு செர்பியாவின் ஃபிலிப் கிரஜினோவிச் சனிக்கிழமை முன்னேறினார்.
    முன்னதாக நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் அவர் 6-4, 6-7(7), 7-6(5) என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 9-ஆவது இடத்தில் இருந்த அமெரிக்காவின் ஜான் இஸ்னரை வீழ்த்தினார்.
    இதனிடையே, போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருந்த குரோஷியாவின் மரின் சிலிச், காலிறுதியில் அதிர்ச்சித் தோல்வி கண்டார். அந்தச் சுற்றில் அவர் உலகின் 83-ஆம் நிலை வீரரான பிரான்ஸின் ஜூலியன் பெனட்டியுவிடம் 6-7(7), 5-7 என்ற செட் கணக்கில் தோல்வி கண்டார். 
    மற்றொரு காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 16-ஆவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் ஜேக் சாக் 6-7(7), 6-2, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ஃபெர்னான்டோ வெர்டாஸ்கோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதையடுத்து, அரையிறுதி ஆட்டம் ஒன்றில் பெனட்டியு-ஜேக் சாக் மோதுகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai