Enable Javscript for better performance
"பிசிசிஐ-க்கு எதிரான கருத்தை ஸ்ரீசாந்த் திரும்பப் பெற வேண்டும்'- Dinamani

சுடச்சுட

    

    "பிசிசிஐ-க்கு எதிரான கருத்தை ஸ்ரீசாந்த் திரும்பப் பெற வேண்டும்'

    By DIN  |   Published on : 05th November 2017 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) எதிராக தெரிவித்த கருத்துகளை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் திரும்ப பெற வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறினார்.
    சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதித்தது பிசிசிஐ. இந்நிலையில், சூதாட்ட விவகாரத்தில் 13 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டதாகவும், ஆனால் பிசிசிஐ தனக்கு எதிராக மட்டுமே ஒருதலைப்பட்டசமாக செயல்பட்டதாகவும் அவர் கருத்து தெரிவித்தார். அத்துடன், தனக்கு எதிராக விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்குமாறு பிசிசிஐக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதாகவும் ஸ்ரீசாந்த் தெரிவித்திருந்தார்.
    இந்நிலையில், பெங்களூரில் சனிக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கபில்தேவ், இதுகுறித்து கூறியதாவது:
    பிசிசிஐ ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக கூறியதை ஸ்ரீசாந்த் திரும்பப் பெற வேண்டும். ஒருவேளை, பிசிசிஐ அவ்வாறு நடந்துகொண்டிருப்பதாக அவர் கருதினால், அதுதொடர்பான போதிய காரணங்கள், ஆதாரங்களை அவர் தெரிவிக்க வேண்டும். எனினும், அவரது தனிப்பட்ட கருத்துகள் குறித்து என்னால் அதிகம் பேச முடியாது என்றார் கபில்தேவ்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai