Enable Javscript for better performance
மரியாதை குறைவாக நடந்துகொண்டதாக விமான நிறுவன ஊழியர் மீது சிந்து புகார்- Dinamani

சுடச்சுட

    

    மரியாதை குறைவாக நடந்துகொண்டதாக விமான நிறுவன ஊழியர் மீது சிந்து புகார்

    By DIN  |   Published on : 05th November 2017 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sindu

    ஹைதராபாதில் இருந்து மும்பைக்கு விமானத்தில் சென்றபோது, விமான பணியாளர் ஒருவர் தன்னிடம் மரியாதை குறைவாக நடந்துகொண்டதாக பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து குற்றம்சாட்டியுள்ளார். எனினும், சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் அவரது குற்றச்சாட்டை மறுத்துள்ளது. 
    இதுகுறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியதாவது:
    தனியார் நிறுவன விமானத்தில் மும்பைக்கு சனிக்கிழமை சென்றேன். அப்போது எனது பாட்மிண்டன் ராக்கெட் 'கிட்'-ஐ உடன் வைத்துக் கொள்வது தொடர்பாக, விமான பணியாளர் ஒருவர் என்னிடம் மரியாதைக் குறைவாக, முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்.
    அவரது செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோன்ற நபர்களால் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படும் என்று கூறியிருந்தார்.
    இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் வெளியிட்டுள்ள பதிலறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:
    சிந்து 'கிட்'கள் உள்ள பை, இருக்கைக்கு மேல் பைகள் வைக்கும் இடத்தில் பொருந்தவில்லை. எனவே, சிந்து மேலாளரின் அனுமதியின்பேரில் அதை விமானத்தின் சரக்குகள் வைக்கும் பகுதிக்கு கொண்டு சென்றோம். மும்பை சென்ற பின்னர் அதை பத்திரமாக ஒப்படைத்தோம்.
    பெரிய அளவில் இருந்த அந்த பையால் இதர பயணிகளுக்கும் இடையூறு ஏற்படும் என்பதாலேயே அவ்வாறு செய்தோம். இச்சம்பவத்தின்போது எங்களது விமான பணியாளர் அமைதியாகவே இருந்தார் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
    எனினும், சிந்துவுடன் பயணித்த அவரது தந்தை கூறுகையில், 'அந்த விமான பணியாளர் சிந்துவின் பையை பெறும்போது முரட்டுத் தனமாக நடந்துகொண்டார்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai