Enable Javscript for better performance
2-ஆவது டி20 ஆட்டம்: நியூஸிலாந்து 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    2-ஆவது டி20 ஆட்டம்: நியூஸிலாந்து 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

    By DIN  |   Published on : 05th November 2017 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    newzaland

    இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்களைக் கொண்ட தொடர் 1-1 என சமனிலையில் உள்ளது.
    இரு அணிகளுக்கு இடையே சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது.
    முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்தில் தொடக்க வீரர்களான மார்ட்டின் கப்டில், காலின் மன்ரோ ஜோடி அபாரமாக ஆடியது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்து. இந்நிலையில், 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 45 ரன்கள் எடுத்து கப்டில் ஆட்டமிழந்தார்.
    தொடர்ந்து வந்த கேப்டன் வில்லியம்சன் 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து டாம் புரூஸ் களம் காண, மறுமுனையில் 54 பந்துகளில் சதம் கடந்தார் மன்ரோ. இவ்வாறாக 196 ரன்கள் எடுத்தது நியூஸிலாந்து.
    மன்ரோ 7 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உள்பட 109 ரன்களுடனும், டாம் புரூஸ் 18 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய தரப்பில் முகமது சிராஜ், யுவேந்திர சாஹல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். பின்னர் ஆடிய இந்திய அணி ஆரம்பம் முதலே சறுக்கத் தொடங்கியது. தொடக்க வீரர்களில் ஒருவரான தவன் ஒரு ரன்னில் வெளியேற, அதே ஓவரில் ரோஹித்தும் ஆட்டமிழந்தார். ஷ்ரேயஸ் ஐயர்-கோலி ஜோடி சற்று நிலைத்து ஸ்கோரை உயர்த்தியது.
    எனினும் ஷ்ரேயஸ் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பாண்டியா ஒரு ரன்னில் பெவிலியன் திரும்ப, கோலியுடன் இணைந்தார் தோனி. இந்த ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்க்க, கோலி அரைசதம் கடந்தார்.
    இந்நிலையில், 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 65 ரன்களுக்கு கோலி ஆட்டமிழந்தார். அக்ஸர் படேல் 5 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இக்கட்டான நேரத்தில் தோனியும் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
    இவ்வாறாக, 20 ஓவர்களில் 156 ரன்கள் எடுத்தது இந்தியா. புவனேஸ்வர் குமார் 2, பூம்ரா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்தார்.


    துளிகள்...
     2 இந்த ஆட்டத்தில் காலின் மன்ரோ அடித்த சதம், டி20 ஆட்டத்தில் அவரது 2-ஆவது சதம் ஆகும். முதல் சதமும் அவர் இந்த ஆண்டிலேயே அடித்துள்ளார். இதன்மூலம் ஒரே ஆண்டில் 2 சதங்கள் கண்ட முதல் வீரர் என்ற பெருமையை மன்ரோ பெற்றுள்ளார். 
     53 இந்த ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 53 ரன்கள் அளித்துள்ளார். இது, டி20 ஆட்டத்தில் முதல் முறையாக களம் காணும் பந்துவீச்சாளர் அளித்துள்ள 3-ஆவது அதிகபட்ச ரன்களாகும். முதல் இடத்தில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் (64 ரன்கள்), 2-ஆவது இடத்தில் ஜோகிந்தர் சர்மா (57 ரன்கள்) உள்ளனர்.
     1 இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து தனது முதல் விக்கெட்டுக்கு 50-க்கும் அதிகமான ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணி கடந்த 5 ஆட்டங்களில் (ஒருநாள் ஆட்டம் உள்பட) இத்தகைய ரன்கள் எடுப்பது இதுவே முதல் முறை. முந்தைய 4 ஆட்டங்களிலும் அந்த அணியின் சராசரி 29.50 ஆகும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai