Enable Javscript for better performance
ஆசிய மகளிர் குத்துச்சண்டை: சரிதா, சோனியாவுக்கு பதக்கம் உறுதி- Dinamani

சுடச்சுட

    

    ஆசிய மகளிர் குத்துச்சண்டை: சரிதா, சோனியாவுக்கு பதக்கம் உறுதி

    By DIN  |   Published on : 06th November 2017 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆசிய மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சரிதா தேவி, சோனியா லேதர் ஆகியோர் தங்களுக்கான எடைப் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்துள்ளனர்.
    இதில் 64 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றுள்ள சரிதா தேவி, தனது காலிறுதியில் உஸ்பெகிஸ்தானின் மஃபுதுனாகோன் மெலிவாவை வீழ்த்தினார். அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் சரிதா, இப்போட்டியில் வெல்லும் பதக்கம், ஆசிய சாம்பியன்ஷிப்பில் அவரது 6-ஆவது பதக்கமாக இருக்கும்.
    இதேபோல் 57 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடும் சோனியா லேதர், கஜகஸ்தானின் நாஸிம் இச்ஷானோவாவை காலிறுதியில் வீழ்த்தி பதக்க வாய்ப்பு சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 
    மற்றொரு இந்திய வீராங்கனையான லவ்லினா போர்கோஹெய்ன் தனது காலிறுதியில் மங்கோலியாவின் எர்டெனடுயா எங்பாதரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். 
    இத்துடன், ஆசிய மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்க வாய்ப்பை உறுதி செய்துள்ள வீராங்கனைகளின் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது.
    இதனிடையே, 51 கிலோ எடைப் பிரிவில் நீரஜ் தனது காலிறுதியில் சீன தைபேவின் சோல் மி பாங்கிடம் தோல்வி கண்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai