Enable Javscript for better performance
இந்தியாவுடனான தொடர்:இலங்கை அணி அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாட தினேஷ் சண்டிமல் தலைமையிலான இலங்கை அணி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.
    காலில் காயம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இடம்பெறாத ஏஞ்ஜெலோ மேத்யூஸ் அணிக்குத் திரும்ப, பேட்ஸ்மேனான குசல் மெண்டிஸ் நீக்கப்பட்டுள்ளார். 2015-ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான குசல் மெண்டிஸ் தொடர்ந்து 22 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
    3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் ஆட்டங்கள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய-இலங்கை அணிகள் மோதவுள்ளன. இந்தத் தொடர் வரும் 16-ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது.
    இலங்கை அணி: தினேஷ் சண்டிமல் (கேப்டன்), திமுத் கருணாரத்னே, தனஞ்ஜெய டி சில்வா, சதீரா சமரவிக்ரமா, ஏஞ்ஜெலோ மேத்யூஸ், லாஹிரு திரிமானி, ரங்கனா ஹெராத், சுரங்கா லக்மல், தில்ருவன் பெரேரா, லாஹிரு காமெஜ், லக்ஷன் சன்டகன், விஷ்வா ஃபெர்னான்டோ, டாசன் சனகா, நிரோஷன் டிக்வெல்லா, ரோஷன் சில்வா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai