Enable Javscript for better performance
காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்- Dinamani

சுடச்சுட

    

    காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்

    By DIN  |   Published on : 06th November 2017 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் பிரிவில் இந்தியாவின் அனீஷ் பன்வாலா வெள்ளியும், நீரஜ் குமார் வெண்கலமும் வென்றனர்.
    ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற '25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல்' பிரிவின் இறுதிச் சுற்றில், அனீஷ் 2-ஆவது இடமும், நீரஜ் 3-ஆவது இடமும் பிடித்தனர். ஆஸ்திரேலியாவின் செர்ஜே எவ்லெஸ்கி 28 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
    இதனிடையே, மகளிர் 'ரைஃபிள் 3 பொசிஷன்ஸ்' பிரிவு இறுதிச் சுற்றில், இந்தியாவின் காயத்ரி 429.7 புள்ளிகளுடன் 4-ஆவது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார். 
    இதர இந்திய வீராங்கனைகளான அதிதி சிங், தேஜஸ்வினி சாவந்த் முறையே 6 மற்றும் 7-ஆவது இடங்களைப் பிடித்தனர். 
    ஸ்காட்லாந்தின் சியானைட் மின்தோஷ் 459.9 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். பிரிட்டனின் கேட்டி கிலீசன் வெள்ளியும், சிங்கப்பூரைச் சேர்ந்த மார்டினா வெலோஸா வெண்கலமும் வென்றனர்.
    மகளிர் டிராப் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்தியாவின் ஷிரேயாசி சிங் 6-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்தப் பிரிவில், ஆஸ்திரேலியாவின் லடிஷா ஸ்கேன்லன் தங்கமும், ஸ்காட்லாந்தின் ஷரான் நிவன் வெள்ளியும் வென்றனர். ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற நியூஸிலாந்தின் நடாலி ரூனி வெண்கலம் வென்றார்.
    இப்போட்டியில் இந்தியா இதுவரை 4 தங்கம் உள்பட, 16 பதக்கங்களை வென்றுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai