Enable Javscript for better performance
சப்-ஜூனியர் பாட்மிண்டன்: ரித்விக், பிரணவி வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு சப்-ஜூனியர் ரேங்கிங் பாட்மிண்டன் போட்டியில் சென்னையின் ரித்விக் சஞ்சீவி, பிரணவி ஆகியோர் தங்களது பிரிவில் கோப்பை வென்றனர்.
    தமிழ்நாடு பாட்மிண்டன் சங்கத்தின் ஒத்துழைப்புடன், ஹெச்ஏபி பாட்மிண்டன் மையம் சார்பில் நடத்தப்பட்ட இப்போட்டி விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. 
    இதில் 13 மற்றும் 15 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு13 & யு15) பிரிவுகளில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 646 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
    இதில் 15 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ரித்விக் சஞ்சீவி 21-17, 16-21, 21-14 என்ற செட் கணக்கில் சென்னையின் சித்தாந்த் குப்தாவை வென்றார். மகளிர் ஒற்றையர் பிரிவில் பிரணவி 21-18, 21-12 என்ற செட் கணக்கில் கோவையின் தான்யாவை வீழ்த்தினார்.
    யு-13 பிரிவு இறுதிச்சுற்றில் மதுரையைச் சேர்ந்த அஸ்வின் கார்த்திக் 21-15, 15-21, 21-7 என்ற செட் கணக்கில் கோவையின் நிதினை வென்றார். மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் திருவள்ளூரின் தீப்தா 21-18, 21-15 என்ற செட் கணக்கில் ஜெயானியை வென்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai