Enable Javscript for better performance
ஷென்ஸென் சேலஞ்சர் டென்னிஸ்: விஷ்ணு-பாலாஜி ஜோடிக்கு பட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஷென்ஸென் சேலஞ்சர் டென்னிஸ்: விஷ்ணு-பாலாஜி ஜோடிக்கு பட்டம்

    By DIN  |   Published on : 06th November 2017 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    visnu

    சீனாவில் நடைபெற்ற ஷென்ஸென் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் விஷ்ணு வர்தன்-ஸ்ரீராம் பாலாஜி ஜோடி பட்டம் வென்றது. இது, 2017-ஆம் ஆண்டில் இந்த ஜோடி வெல்லும் 3-ஆவது சேலஞ்சர் பட்டமாகும்.
    இறுதிச்சுற்றில் விஷ்ணு-பாலாஜி ஜோடி, போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருந்த அமெரிக்காவின் ஆஸ்டின் கிராஜிசெக்-ஜேக்சன் வித்ரோ ஜோடியை 7-6(3), 7-6(3) என்ற செட் கணக்கில் வீழ்த்தியது. இந்த பட்டத்தை வென்றதன் மூலம் விஷ்ணு-பாலாஜி ஜோடிக்கு தலா 90 தரவரிசை புள்ளிகள் கிடைத்துள்ளன. அத்துடன் ரூ.48 லட்சம் ரொக்கப் பரிசையும் இருவரும் பகிர்ந்து கொள்கின்றனர்.
    முன்னதாக இந்த ஆண்டில் செங்டு சேலஞ்சர், ஃபெர்கானா சேலஞ்சர் ஆகிய போட்டிகளிலும் விஷ்ணு-பாலாஜி ஜோடி பட்டம் வென்றிருந்தது. இதில் விஷ்ணு, ஜப்பானின் டொஷிஹிடே மட்சுயி உடன் இணைந்து அஸ்டானா சேலஞ்சர் பட்டமும் வென்றுள்ளார். ஆடவர் இரட்டையர் தரவரிசையில் தற்போது 134-ஆவது இடத்தில் இருக்கும் விஷ்ணு, திங்கள்கிழமை வெளியாகும் தரவரிசை பட்டியலில் இதுவரை எட்டாத இடத்துக்கு முன்னேறுவார் எனத் தெரிகிறது. தரவரிசையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 123-ஆவது இடத்துக்கு முன்னேறியதே அவரது அதிகபட்சமாகும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai