Enable Javscript for better performance
அரை மாரத்தான்: காற்று மாசுவை களைய ஏற்பாடுகள்- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள அரை மாரத்தான் போட்டியின்போது, காற்று மாசு பிரச்னையால் பங்கேற்பாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    தில்லியின் காற்றுத் தரம் மோசமான நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில், அங்கு நடைபெற இருக்கும் அரை மாரத்தான் போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு சுகாதாரச் சீர்கேடுகள் எழ வாய்ப்பு இருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்திருந்தது.
    இந்நிலையில் அதுதொடர்பாக, போட்டி ஏற்பாட்டாளர்கள் திங்கள்கிழமை கூறியதாவது:
    அரை மாரத்தான் போட்டி நடைபெறும் நாளில், போட்டி வழித்தடம் முழுவதுமாக காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் உப்பு கலக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தெளிக்கப்படும். அத்துடன், அந்த வழித்தடத்தில் வாகனங்கள் இயக்கத்துக்கும் தடை விதிக்கப்படும் என்று கூறினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai