Enable Javscript for better performance
இந்தியா-நியூசி., இடையேயான மூன்றாவது டி20 போட்டி: மழையால் தாமதம்!- Dinamani

சுடச்சுட

    

    இந்தியா-நியூசி., இடையேயான மூன்றாவது டி20 போட்டி: மழையால் தாமதம்! 

    By DIN  |   Published on : 07th November 2017 07:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    t20

     

    திருவனந்தபுரம்: இந்தியா-நியூசிலாந்து அணிகளை இடையே திருவனந்தபுரத்தில் இன்று மாலை நடைபெறுவதாக இருந்த டி20    கிரிக்கெட் போட்டி துவங்குவதில் மழை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. தில்லியில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியாவும், ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றன.

    இந்நிலையில் சாம்பியன் யார் என்பதனை தீர்மானிக்கப் போகும் 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று மாலை நடைபெறுவதாக இருந்தது.

    ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த போட்டியில் மழை காரணமாக டாஸ் போடுவது தாமதம் ஆகியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai