Enable Javscript for better performance
எஸ்.ஒய்.குரேஷி தலைமையில் ஏஐஎஃப்எஃப்-க்கு புதிதாக தேர்தல்- Dinamani

சுடச்சுட

    

    எஸ்.ஒய்.குரேஷி தலைமையில் ஏஐஎஃப்எஃப்-க்கு புதிதாக தேர்தல்

    By DIN  |   Published on : 07th November 2017 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி தலைமையில் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு (ஏஐஎஃப்எஃப்) புதிதாக தேர்தல் நடத்த தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    முன்னதாக, அந்தச் சம்மேளனத்தின் தலைவராக பிரஃபுல் படேல் தேர்வு செய்யப்பட்ட தேர்தலை ஒத்திவைத்து நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்த நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பாட், நாஸ்மி வாஸிரி ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:
    அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பொறுப்புக்கான தேர்தல் விவகாரத்தில் கடைப்பிடிக்கப்பட்ட சம்மேளனத்தின் விதிகள், தேசிய விளையாட்டு வழிமுறைகளை மீறிய வகையில் உள்ளது. எனவே, 2016 டிசம்பர் 21-ஆம் தேதி வெளியான சம்மேளன தேர்தல் முடிவுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
    அத்துடன், சம்மேளனத் தலைவர் பதவிக்கு புதிதாக நடத்தப்படும் தேர்தலுக்கான அதிகாரியாக முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி நியமிக்கப்படுகிறார். புதிய தேர்தலானது, தேசிய விளையாட்டு வழிமுறைகளுக்கு உள்பட்டு நடத்தப்பட வேண்டும்.
    அதற்குகந்த வகையில், அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai