Enable Javscript for better performance
காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் 20 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு- Dinamani

சுடச்சுட

    

    காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் 20 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

    By DIN  |   Published on : 07th November 2017 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 6 தங்கம் உள்பட 20 பதக்கங்களுடன் நிறைவு செய்துள்ளது.
    இப்போட்டியின் கடைசி நாளான திங்கள்கிழமை ஆடவருக்கான 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இந்தியாவின் சத்யேந்திர சிங் தங்கமும், சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளியும் வென்றனர்.
    முன்னதாக நடைபெற்ற இறுதிச்சுற்றுக்கு சத்யேந்திர சிங் மற்றும் சஞ்சீவுடன் செயின் சிங்கும் தகுதிபெற்றிருந்தார். தொடக்க நிலையில் செயின் சிங் 3-ஆவது இடத்தில் இருக்க, 3 பதக்கங்களையும் இந்தியா கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அவர் பின்னுக்குத்தள்ளப்பட்டார்.
    சத்யேந்திர சிங் 454.2 புள்ளிகளுடன் முதலிடத்தையும், சஞ்சீவ் ராஜ்புத் 453.3 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தையும் பிடித்தனர். ஆஸ்திரேலியாவின் டேன் சாம்சன் 3-ஆம் இடம் பிடித்தார்.
    ஆடவருக்கான 'டிராப்' பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர் பீரேந்தீப் சோதி, அதில் 4-ஆவது இடம் பிடித்தார். இந்த காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியை இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களுடன் நிறைவு செய்துள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai