முதல் பந்திலிருந்து அடித்தாடவும்: தோனிக்கு சேவாக் அறிவுரை!

சரியான நேரத்தில் டி20 போட்டியிலிருந்து தோனி விலகுவார். எந்த ஒரு இளம் வீரருக்கும் இடைஞ்சலாக...
முதல் பந்திலிருந்து அடித்தாடவும்: தோனிக்கு சேவாக் அறிவுரை!

தோனியின் டி20 ஆட்டம் குறித்து முன்னாள் வீரர் சேவாக் தன் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது. மொத்தம் 3 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடர், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதை அடுத்து சமநிலையில் உள்ளது. எனவே, கடைசி ஆட்டத்தில் வென்று எந்த அணி தொடரைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலோங்கியுள்ளது.

2-வது டி20 போட்டியில் தோனி 49 ரன்கள் எடுத்தபோதும் அவர் விளையாடிய விதம் விமரிசனங்களை வரவழைத்துள்ளது. இதனால் தோனியை அணியிலிருந்து நீக்கவேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

இந்நிலையில் முன்னாள் வீரர் சேவாக், தோனியின் டி20 ஆட்டம் குறித்துக் கூறியதாவது:

தனக்கான பொறுப்புகள் என்ன என்பதை தோனி உணர வேண்டும். பெரிய இலக்கை விரட்டும்போது ஆட்டத்தின் போக்கை ஆரம்பத்திலிருந்தே அவர் மாற்றவேண்டும். முதல் பந்திலிருந்து அடித்தாடவேண்டும். இந்திய அணி நிர்வாகம் இதை அவருக்கு உணர்த்த வேண்டும். ஆனால் டி20 கிரிக்கெட்டிலும் கோலி அணிக்கு தோனி தேவைப்படுகிறார். சரியான நேரத்தில் டி20 போட்டியிலிருந்து தோனி விலகுவார். எந்த ஒரு இளம் வீரருக்கும் இடைஞ்சலாக இருக்கமாட்டார் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com