Enable Javscript for better performance
ஆசிய மகளிர் குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் மேரி கோம், சோனியா லேதர்- Dinamani

சுடச்சுட

    

    ஆசிய மகளிர் குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் மேரி கோம், சோனியா லேதர்

    By DIN  |   Published on : 08th November 2017 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    meri-gom

    ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம், சோனியா லேதர் ஆகியோர் தங்களது பிரிவில் இறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.
    இப்போட்டியில் பங்கேற்றிருந்த இதர 5 இந்திய வீராங்கனைகள் வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறினர்.
    இதில் மேரி கோம் 48 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதியில் ஜப்பானின் சுபாசா கோமுராவை 5-0 என்ற கணக்கில் வென்றதையடுத்து, இறுதிச்சுற்றில் வடகொரியாவின் கிம் ஹையாங் மியை எதிர்கொள்கிறார். அதில் அவர் தங்கம் வெல்லும் பட்சத்தில், ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 48 கிலோ எடைப் பிரிவில் அவர் வெல்லும் முதல் தங்கமாக அது இருக்கும்.
    ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இதுவரை 6 முறை பங்கேற்றுள்ள மேரி கோம், தற்போது 5-ஆவது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
    இதேபோல், மகளிர் 57 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றுள்ள சோனியா லேதர், தனது அரையிறுதியில் உஸ்பெகிஸ்தானின் யோத்கோராய் மிர்ùஸவாவை வீழ்த்தினார். இறுதிச்சுற்றில் அவர் சீனாவின் யின் ஜுன்ஹுவாவை புதன்கிழமை எதிர்கொள்கிறார்.
    இதனிடையே, 64 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட இந்தியாவின் சரிதா தேவி, அரையிறுதியில் சீனாவின் டெள டானிடம் வீழ்ந்து வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறினார். 54 கிலோ பிரிவில் போட்டியிட்ட சிக்ஷாவை, சீன தைபேவின் லின் யு டிங் அரையிறுதியில் வீழ்த்தினார்.
    60 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் பிரியங்கா செளதரி, தென் கொரியாவின் ஒஹ் யோஞ்சியிடம் அரையிறுதியில் வீழ்ந்து வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறினார். 69 கிலோ பிரிவு அரையிறுதியில் லவ்லினா போர்கோஹெய்ன், கஜகஸ்தானின் வாலென்டினா கால்சோவாவிடமும், 81 கிலோவுக்கு அதிகமான எடைப் பிரிவு அரையிறுதியில் சீமா பூனியா, கஜகஸ்தானின் குஸல் இஸ்மடோவாவிடமும் வீழ்ந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai