Enable Javscript for better performance
ஒரே போட்டி- இருமுறை ஹாட்ரிக்: மிட்செல் ஸ்டார்க் சாதனை- Dinamani

சுடச்சுட

    

    ஒரே போட்டி- இருமுறை ஹாட்ரிக்: மிட்செல் ஸ்டார்க் சாதனை

    By DIN  |   Published on : 08th November 2017 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mitcel

    ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், உள்நாட்டு முதல்தர கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் இருமுறை ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தி செவ்வாய்க்கிழமை சாதனை படைத்தார்.
    ஆஸ்திரேலியாவில், 'ஷெஃபீல்டு ஷீல்டு' முதல்தர கிரிக்கெட் போட்டிக்கான ஆட்டத்தில் நியூ செளத் வேல்ஸ்-மேற்கு ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் நியூ செளத் வேல்ஸ் அணி 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    முன்னதாக, மேற்கு ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸின்போது, 67-ஆவது ஓவரை வீசிய நியூ செளத் வேல்ஸ் வீரரான ஸ்டார்க் 4-ஆவது பந்தில் ஜேசன் பெஹ்ரென்டார்ஃப், அடுத்த பந்தில் டேவிட் மூடி, கடைசி பந்தில் சிம்மன் மேக்கின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    அதேபோல், மேற்கு ஆஸ்திரேலியாவின் 2-ஆவது இன்னிங்ஸின்போது 76-ஆவது ஓவரின் கடைசி இரண்டு பந்துகள் மற்றும் 77-ஆவது ஓவரின் முதல் பந்தில் முறையே பெஹ்ரென்டார்ஃப், டேவிட் மூடி, ஜோனோ வெல்ஸ் ஆகியோரை வீழ்த்தி சாதனை படைத்தார்.
    இதன்மூலம், முதல்தர கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் இருமுறை ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை ஸ்டார்க் பெற்றுள்ளார். அதேபோல், ஒட்டுமொத்த முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் இச்சாதனையை நிகழ்த்திய 8-ஆவது வீரர் ஸ்டார்க் ஆவார். அதேவேளையில், கடந்த 39 ஆண்டுகளில் இந்தச் சாதனையை செய்துள்ள முதல் வீரரும் அவரே ஆவார்.
    முன்னதாக, மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டார்க் 97 ரன்கள் கொடுத்து மொத்தம் 9 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
    ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஜிம்மி மேத்யூஸ் கடந்த 1912-ஆம் ஆண்டு மான்செஸ்டரில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இரு முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியிருந்தார். தற்போது மிட்செல் ஸ்டார்க் 105 ஆண்டுகளுக்குப் பிறகு அவ்வாறு ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai