Enable Javscript for better performance
தேசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இறுதிச்சுற்றில் சாய்னா-சிந்து, ஸ்ரீகாந்த்-பிரணாய் மோதல்- Dinamani

சுடச்சுட

    

    தேசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இறுதிச்சுற்றில் சாய்னா-சிந்து, ஸ்ரீகாந்த்-பிரணாய் மோதல்

    By DIN  |   Published on : 08th November 2017 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    batminton

    இரட்டையர் அரையிறுதியில் விளையாடும் அஸ்வினி-சாத்விக் ஜோடி.

    சீனியர் தேசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் சாய்னா நெவால்-பி.வி.சிந்துவும், ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஸ்ரீகாந்த்-ஹெச்.எஸ்.பிரணாயும் புதன்கிழமை மோதுகின்றனர்.
    மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் 82-ஆவது சீனியர் தேசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஒன்றில் உலகின் 11-ஆம் நிலை வீராங்கனையான சாய்னா, போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்த அனுரா பிரபுதேசாயை 21-11, 21-10 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
    மற்றொரு அரையிறுதியில், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பி.வி.சிந்து 17-21, 21-15, 21-11 என்ற செட் கணக்கில் ருத்விகா ஷிவானியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதையடுத்து, பட்டம் வெல்லும் ஆட்டத்தில் சாய்னா-சிந்து பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
    இதில் சாய்னா 2007-ஆம் ஆண்டுக்குப் பிறகும், சிந்து 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகும் தேசிய பாட்மிண்டனில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
    இதேபோல், ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் ஒன்றில், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்ரீகாந்த் 21-16, 21-18 என்ற செட் கணக்கில் லக்ஷயா சென்-ஐ வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் ஹெச்.எஸ்.பிரணாய் 21-14, 21-17 என்ற செட் கணக்கில் சுபாங்கர் தேசாயை வென்று இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றார்.
    மகளிர் இரட்டையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சிக்கி ரெட்டி-அஸ்வினி பொன்னப்பா ஜோடி, சன்யோகிதா கோர்படே-பிரஜக்தா சாவந்த் ஜோடியை இறுதி ஆட்டத்தில் எதிர்கொள்கிறது.
    கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், சாத்விக் சாய் ராஜ்-அஸ்வினி பொன்னப்பா ஜோடி, போட்டித் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் பிரணவ் ஜெர்ரி சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடியை எதிர்த்து களம் காண்கிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai