Enable Javscript for better performance
2018 பிப்ரவரியில் சென்னை ஓபன் டென்னிஸ்- Dinamani

சுடச்சுட

    

    சென்னையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12 முதல் 18-ஆம் தேதி வரையில் 'சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்' போட்டி நடத்தப்பட்ட உள்ளது.
    இதுதொடர்பாக, போட்டியை நடத்தும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் (டிஎன்டிஏ) சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
    இந்த ஏடிபி சேலஞ்சர் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்டிஏடி) மைதானத்தில் நடைபெறும். தொழில்முறை டென்னிஸ் போட்டியாளர்களுக்கான சங்கம் (ஏடிபி), அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ) ஆகியவை இந்தப் போட்டியை நடத்துவதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளன.
    இப்போட்டிக்கான பரிசுத் தொகை ரூ.32 லட்சமாகும். இதில் சர்வதேச அளவிலான வீரர்கள் மற்றும் பிரபல இந்திய டென்னிஸ் வீரர்களும் பங்கேற்க உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
    இதுகுறித்து, டிஎன்டிஏ தலைவர் எம்.ஏ.அழகப்பன் கூறுகையில், 'இந்தப் போட்டியானது இந்திய வீரர்கள் தங்களது தரவரிசையை மேம்படுத்திக் கொள்ளவும், முதல் 100 இடங்களுக்குள்ளாக வருவதற்கும் உதவுவதாக இருக்கும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழக அரசின் ஆதரவுடன் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இப்போட்டியை நடத்த இயலும் என நம்புகிறோம்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai