Enable Javscript for better performance
துளிகள்...- Dinamani

சுடச்சுட

    

     'இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடினோம். இருப்பினும், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கடைசி ஆட்டம் மழை காரணமாக 8 ஓவராக குறைக்கப்பட்டது கடினமாக இருந்தது' என்று நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்தார்.
     இந்தியாவுடன் தலா 3 டெஸ்ட் தொடர்கள், 3 ஒருநாள் ஆட்டங்கள், 3 டி20 ஆட்டங்களில் விளையாட தினேஷ் சண்டிமல் தலைமையிலான இலங்கை அணி தில்லிக்கு புதன்கிழமை வந்தது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட், தில்லியில் வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.
     தனக்கு இன்னும் அரசு வேலை அளிக்கப்படவில்லை என்று வருத்தம் தெரிவித்திருந்த இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கோல்கீப்பர் சவீதாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் உறுதி அளித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai