மும்பையின் 500-வது ரஞ்சி போட்டி: வியத்தகு சாதனைகள்!

ரஞ்சி போட்டி வரலாற்றில் 500 போட்டிகளில் பங்கேற்றிருக்கும் முதல் அணி என்கிற பெருமையை மும்பை அணி பெற்றுள்ளது.... 
மும்பையின் 500-வது ரஞ்சி போட்டி: வியத்தகு சாதனைகள்!

41 முறை ரஞ்சி கோப்பையை வென்ற மும்பை அணி இன்று தனது 500-வது ரஞ்சி போட்டியை பரோடா அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

ரஞ்சி போட்டி 1934 முதல் நடைபெற்று வருகிறது. ரஞ்சி போட்டி வரலாற்றில் 500 போட்டிகளில் பங்கேற்றிருக்கும் முதல் அணி என்கிற பெருமையை மும்பை அணி பெற்றுள்ளது. இதுவரை நடைபெற்ற 83 ரஞ்சி போட்டிகளில் மும்பை அணி 41 முறை கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. 500-வது போட்டியில் விளையாடுவது தொடர்பாக நடந்த விழாவில் மும்பை ரஞ்சி அணியின் கேப்டன்கள் கெளரவிக்கப்பட்டார்கள். 

ரஞ்சி போட்டியில் மும்பை அணியின் வியத்தகு சாதனைகள்

ரஞ்சி போட்டியில் அதிகமுறை விளையாடிய அணிகள்

500 - மும்பை 
443 - தில்லி 
436 - தமிழ்நாடு 
427 - கர்நாடகா 
412 - ஹைதராபாத் 

 25 கேப்டன்கள்

மும்பை அணி 41 முறை ரஞ்சி கோப்பையை வென்றதில் 25 கேப்டன்களின் பங்களிப்பு உள்ளது. அஜித் வடேகர் தலைமையில் அதிகபட்சமாக நான்குமுறை ரஞ்சி கோப்பையைக் கைப்பற்றியது மும்பை. 1994-95 வருடம் சச்சின் கேப்டனாக இருந்தபோது மும்பை அணி கோப்பையை வென்றுள்ளது. 

நான்கு முறை

அஜித் வடேகர் (1968-69, 1969-70, 1971-72, 1972-73)

மூன்று முறை

மாதவ் மந்திரி (1951-52, 1955-56, 1956-57)

பாலி உம்ரிகர் (1959-60, 1960-61, 1962-63)

ஆர்.ஜி. எனப்படும் பாபு நத்கர்னி (1963-64, 1964-65, 1965-66)

சுனில் கவாஸ்கர் (1976-77, 1983-84, 1984-85)

இரு முறை

விஜய் மர்சண்ட் (1941-42, 1944-45)

மாதவ் ஆப்தே (1958-59, 1961-62)

மனோகர் ஹர்திகர் (1966-67, 1967-68)

அசோக் மண்கட் (1974-75, 1975-76)

வாசிம் ஜாஃபர் (2008-09, 2009-10)

ஒரு முறை

எல்.பி.. ஜெய் (1934-35) , ஹெ.எல். விஜிஃப்தர் (1935-36), கே.சி. இப்ரஹிம் (1948-49), எஸ். டபிள்யூ எனப்படும் ரங்கா சோஹோனி (1953-54), சுதிர் நாயக் (1970-71), ஏக்நாத் சோல்கர் (1980-81), ரவி சாஸ்திரி (1993-94),
சச்சின் டெண்டுல்கர் (1994-95), சஞ்சய் மஞ்ச்ரேக்கர் (1996-97), சமீர் டிகே (1999-00), பராஸ் மாம்ப்ரே (2002-03), சைராஜ் பாட்டுலே (2003-04), அமில் முசும்தார் (2006-07), அஜித் அகர்கர் (2012-13), ஆதித்ய தரே (2015-
16)

மும்பை அணி ரஞ்சி கோப்பையை வென்ற வருடங்கள்

1934/35
1935/36
1941/42
1944/45
1948/49
1951/52
1953/54
1955/56
1956/57
1958/59 முதல் 1972/73 வரை 
1974/75
1975/76
1976/77
1980/81
1983/84
1984/85
1993/94
1994/95
1996/97
1999/00
2002/03
2003/04
2006/07
2008/09
2009/10
2012/13
2015/16 

ஒரு சீசனில் அதிக ரன்கள் எடுத்த மும்பை வீரர்கள்

1321 ரன்கள் ஸ்ரேயாஸ் ஐயர் 2015-16
1260 ரன்கள் வாசிம் ஜாஃபர் 2008 - 09
1089 ரன்கள் ரஹானே 2008 - 09 

ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்த மும்பை வீரர்கள்

50 ராம்காந்த் தேசாய் 1958 - 59
49 பத்மாகர் ஷிவால்கர் 1972 - 73
48 பராஸ் மாம்ப்ரே 1997 - 98

உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் அதிகமுறை பட்டம் வென்ற அணிகள்

46 நியூ சவுத் வேல்ஸ் (115 சீசன்கள்)
41 மும்பை (83)
33 யார்க்‌ஷைர் (118)
31 விக்டோரியா (115)
23 ஆக்லாந்து (90)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com