Enable Javscript for better performance
ஒலிம்பிக்கில் 48 கிலோ பிரிவு சேர்க்கப்பட்டால் சாதகம்- Dinamani

சுடச்சுட

    

    ஒலிம்பிக்கில் 48 கிலோ பிரிவு சேர்க்கப்பட்டால் சாதகம்

    By DIN  |   Published on : 10th November 2017 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    merigom

    ஒலிம்பிக் போட்டிகளில் 48 கிலோ எடைப் பிரிவு சேர்க்கப்பட்டால் தனக்கு அது சாதகமானதாக இருக்கும் என்றும், தான் அதில் சிறப்பாக செயல்பட இயலும் என்றும் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் கூறினார்.
    வியத்நாமில் அண்மையில் நிறைவடைந்த மகளிர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் மேரி கோம் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். நாடு திரும்பிய அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
    நான் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு, முழு உடல்தகுதியுடன் இருக்கும் வரையில் என்னால் யாரையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இதே உடல்தகுதியுடன் நீடித்தால் எவராலும் என்னை வெல்ல இயலாது.
    ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவை புதிதாக சேர்த்தால், அதில் என்னால் சிறப்பாக செயல்பட இயலும். ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட்டில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வெல்வதே எனது அடுத்த இலக்கு. உண்மையில் பிரபலமான வீராங்கனையாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதனால் எப்போதும் கவனமாகவே செயல்படுகிறேன். அது ஒரு நெருக்கடி என நான் கருதவில்லை என்றார் மேரி கோம்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai