Enable Javscript for better performance
காயம்: சீன ஓபனிலிருந்து ஜெயராம் விலகல்- Dinamani

சுடச்சுட

    
    jayaram

    முழங்கால் காயம் காரணாக சீன ஓபன் மற்றும் ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டிகளில் இருந்து விலகுவதாக இந்திய பாட்மிண்டன் வீரர் அஜய் ஜெயராம் அறிவித்துள்ளார்.
    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
    கடந்த சில மாதங்கள் கடினமானதாக அமைந்தது. முழங்கால் காயம் காரணமாக உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு விளையாட இயலவில்லை. அந்தப் போட்டிக்கு முன்பாகவே காயம் இருந்தபோதும், சற்று சமாளித்து விளையாடினேன். கொரியா, ஜப்பான், டென்மார்க், பிரான்ஸ் ஓபன் போட்டிகளில் இருந்து விலகி சிகிச்சை எடுத்துக் கொண்டேன்.
    இந்நிலையில், சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பாக பயிற்சியில் ஈடுபட்டபோது, தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. பரிசோதனை செய்ததில் அது பெரிய அளவிலான காயம் இல்லை எனத் தெரியவந்தது. எனினும், அதிலிருந்து மீள சற்று ஓய்வு தேவைப்படுவதால் சீனா மற்றும் ஹாங்காங் ஓபன் போட்டிகளில் இருந்து விலகுகிறேன் என்று ஜெயராம் கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai