Enable Javscript for better performance
நாக்ஸ்வில்லே சேலஞ்சர்: காலிறுதியில் பயஸ் ஜோடி- Dinamani

சுடச்சுட

    
    payes

    நாக்ஸ்வில்லே சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் லியாண்டர் பயஸ் -பூரவ் ராஜா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
    அமெரிக்காவின் நாக்ஸ்வில்லே நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த டென்னிஸ் போட்டியில், காலிறுதிக்கு முந்தைய ஆட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    இதில், அமெரிக்காவின் கெவின் கிங்-பிராட்லி கிலான் ஜோடியை 6-2, 6-4 என்ற செட் கணக்கில் பயஸ்-பூரவ் ஜோடி வீழ்த்தியது. இதன்மூலம், காலிறுதிக்கு முன்னேறிய இந்த ஜோடி, வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள அந்த ஆட்டத்தில் பிரிட்டனின் எம்.வில்லிஸ்-எல்.பிராடி ஜோடியை எதிர்கொள்கிறது. பயஸ்-பூரவ் ஜோடி இணைந்து இதுவரை பட்டம் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    சரண் ஜோடி வெளியேற்றம்: இதனிடையே, ஸ்லாவாக்கியா தலைநகர் பிரடிஸ்லாவா நகரில் நடைபெற்றுவரும் ஸ்லாவக் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில், இந்திய வீரர் திவிஜ் சரண்- ரஷிய வீரர் மிஹைல் எல்கின் ஜோடி 4-7, 7-6(4), 4-10 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் சான்டர் அரென்ட்ஸ்-குரோஷியாவின் அன்டோனியா சான்சிச் ஜோடியிடம் தோல்வி அடைந்தது.
    இதையடுத்து, தாய்நாடு திரும்பும் சரண், புணேவில் நடைபெறவுள்ள கேபிஐடி சேலஞ்சர், பெங்களூரு ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கவுள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai