Enable Javscript for better performance
விதர்பா வீரருக்கு தலையில் காயம்- Dinamani

சுடச்சுட

    

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் பெங்கால் அணியின் இஷான் போரல் வீசிய பவுன்சர் பந்தை எதிர்கொண்டபோது, விதர்பா அணியின் ஆல் ரவுண்டர் ஆதித்ய சர்வதேவுக்கு தலையில் அடிபட்டது.
     இதனால், மைதானத்தில் சிறிது பதற்றமான சூழல் நிலவியது.
     மேற்கு வங்க மாநிலம், கல்யாணி நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 122-ஆவது ஓவரை இஷான் வீசினார். அந்த ஓவரின் 2-ஆவது பாலை அவர் பவுன்சராக வீசினார். அதை எதிர்கொள்ள ஆதித்யா முயன்றபோது அவரது தலையில் வலப்பக்கத்தில் பந்து தாக்கியதுடன், தலைக்கவசத்தில் பந்து சிக்கிக்கொண்டது. இதையடுத்து, வலியில் துடித்த அவர், அந்த இடத்தில் சுருண்டு விழுந்தார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
     பின்னர் விளையாடத் தொடங்கிய அவர் 3 பந்துகளை எதிர்கொண்ட பிறகு மயக்கமடைந்தார். இதையடுத்து, அவர் பெவிலியனில் ஓய்வெடுக்க அனுமதிக்கப்பட்டார். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு 133-ஆவது ஓவரில் ஆதித்யா மீண்டும் ஆடத் தொடங்கினார். 89 ரன்கள் எடுத்தபோது இஷான் பந்து வீச்சில் அவர் ஆட்டமிழந்தார்.
     ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனான பிலிப் ஹியூஸ், உள்நாட்டு போட்டியின்போது சகவீரர் வீசிய பவுன்சர் பந்தை எதிர்கொண்டபோது தலையில் காயமடைந்து உயிரிழந்த சம்பவம் அனைத்துத் தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது நினைவுகூரத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai