Enable Javscript for better performance
ஐஎஸ்எல் போட்டியால் இந்தியர்களின் ஆட்டம் மேம்பட்டுள்ளது- Dinamani

சுடச்சுட

    

    ஐஎஸ்எல் போட்டியால் இந்தியர்களின் ஆட்டம் மேம்பட்டுள்ளது

    By  மும்பை,  |   Published on : 12th November 2017 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    n9

    இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் மூலமாக இந்திய கால்பந்து வீரர்களின் ஆட்டம் மேம்பட்டுள்ளது என்று கேரள பிளாஸ்டர்ஸ் அணி வீரர் இயான் ஹியூம் கூறினார்.
     இதுகுறித்து அவர் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியானது, இந்திய கால்பந்தின் மேம்பாட்டுக்கு உதவியதில் சந்தேகம் இல்லை.
     என்னுடன் ஆடும் இந்திய வீரர்களின் ஆட்டம் மேம்பட்டுள்ளதன் மூலம் என்னால் அதை உணர முடிகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு இருந்த நிலையைக் காட்டிலும் இந்திய கால்பந்து தற்போது மிகவும் மேம்பட்டுள்ளது. சர்வதேச கால்பந்து தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள்ளாகவும் வந்துள்ளது.
     அவ்வாறு மேம்பட்ட வீரர்களில் சந்தேஷ் ஜிங்கன் குறிப்பிடத்தக்க ஒருவராவார். ஆரம்பத்தில் சாதாரண வீரராக இருந்த அவர், ஆரோன் ஹியூக்ஸ், கார்லோஸ் மெர்சனா, செட்ரிக் ஹெங்பர்ட் ஆகிய வீரர்களுடன் விளையாடியதை அடுத்து அவரது ஆட்டம் மேம்பட்டது.
     தற்போது தனது ஆட்டத்தால் பிரபலமாகியிருக்கிறார். அவரைப் போல பெங்களூருக்காக ஆட உள்ள ராகுல் பெக்கே, சென்னை அணிக்கா ஆடி வரும் ஜிஜி ஆகியோரின் ஆட்டமும் சிறப்படைந்து வருகிறது என்று இயான் ஹியூம் கூறினார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai