Enable Javscript for better performance
காயத்திலிருந்து மீளும் ஸ்ரீகாந்த்: ஹாங்காங் ஓபனில் களம் காண்கிறார்- Dinamani

சுடச்சுட

    

    காயத்திலிருந்து மீளும் ஸ்ரீகாந்த்: ஹாங்காங் ஓபனில் களம் காண்கிறார்

    By  புது தில்லி  |   Published on : 12th November 2017 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    SRI

    கால் காயத்திலிருந்து மீண்டு வரும் இந்திய பாட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த், ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்க உள்ளார்.
     இந்த சீசனில் இதுவரை 4 பட்டங்களை வென்றுள்ள ஸ்ரீகாந்த், சமீபத்தில் நிறைவடைந்த சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஹெச்.எஸ்.பிரணாயிடம் தோல்வி கண்டார். அப்போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.
     இந்நிலையில், செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியதாவது: சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியின்போது, தசைப் பகுதியில் அழுத்தம் காரணமாக காயம் ஏற்பட்டது.
     பெரிய அளவிலான காயம் இல்லை என்றபோதிலும், ஒரு வாரம் ஓய்வெடுக்க மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
     அதன் காரணமாக வரும் 14 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியிலிருந்து விலகுகிறேன். எனினும், ஒரு வாரத்தில் மீண்டும் களம் காணுவேன் என்றார் ஸ்ரீகாந்த்.
     சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தற்போது 2-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்ரீகாந்த், ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் பட்டம் வெல்லும் பட்சத்தில் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறுவார். கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி முதல் ஸ்ரீகாந்த் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai