கிரிக்கெட் அகாதெமி தொடங்கினார் தோனி
By துபை, | Published on : 12th November 2017 01:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான எம்.எஸ்.தோனி, ஐக்கிய அரபு அமீரகத்தில் கிரிக்கெட் அகாதெமி ஒன்றை தொடங்கியுள்ளார்.
"எம்எஸ்தோனி கிரிக்கெட் அகாதெமி' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த அகாதெமியை தோனி சனிக்கிழமை தொடக்கி வைத்தார். இதில் இந்தியாவைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அகாதெமியில், 4 செயற்கை இழை ஆடுகளங்கள், 3 சிமெண்ட் மற்றும் 3 மேட் ஆடுகளங்கள், சுழற்பந்து மற்றும் ஸ்விங் பந்துவீச்சு இயந்திரங்கள், பயிற்சிக்கான வலையமைப்புகள், இரவுப் பயிற்சிக்கான ஒளி விளக்குகள், விளையாட்டு பொருள் விற்பனைக் கூடங்கள் ஆகியவை உள்ளன. மும்பையை சேர்ந்த விஷால் மஹாதிக் இந்த அகாதெமிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அகாதெமி தொடக்க நிகழ்ச்சியில் பேசிய தோனி, "கிரிக்கெட்டுக்கு என்னால் முடிந்த வரையில் பங்களிப்பு செய்வதே எனது கனவு. அந்த திசையில் எனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளேன்' என்றார்.