Enable Javscript for better performance
டி20 கிரிக்கெட்: பாக்.-மே.இ.தீவுகள் இடையே 5 ஆண்டு ஒப்பந்தம்- Dinamani

சுடச்சுட

    

    டி20 கிரிக்கெட்: பாக்.-மே.இ.தீவுகள் இடையே 5 ஆண்டு ஒப்பந்தம்

    By  கராச்சி,  |   Published on : 12th November 2017 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2018-ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட பாகிஸ்தான்-மேற்கிந்தியத் தீவுகள் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தொடர்கள் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளன.
     இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேத்தி சனிக்கிழமை கூறியதாவது:
     பாகிஸ்தான்-மேற்கிந்தியத் தீவுகள் இடையே அடுத்த ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு டி20 கிரிக்கெட் தொடர் ஆண்டுதோறும் நடைபெறும். அந்தத் தொடர்களின் தேதிகள் மற்றும் இடங்கள் பின்னர் முடிவு செய்யப்படும்.
     இதில், 2018-ஆம் ஆண்டு டி20 தொடர் பாகிஸ்தானில் மார்ச் 29, 31, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. முன்னதாக அந்தத் தொடர் இந்த நவம்பரில் நடைபெறுவதாக இருந்தது. வானிலை சூழ்நிலை காரணமாக தொடரை அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைத்துள்ளோம்.
     அடுத்த 5 ஆண்டுகளிலும் டி20 தொடரில் விளையாட மேற்கிந்தியத் தீவுகள் பாகிஸ்தானுக்கு வரும். அதேபோல், ஆண்டுதோறும் பாகிஸ்தானும் அமெரிக்காவுக்கு விளையாடச் செல்லும். இதில், அமெரிக்காவில் நடைபெறும் தொடர்கள் முத்தரப்பு போட்டிகளாக இருக்கும். பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் தவிர மூன்றாவது அணியானது ஒவ்வொரு ஆண்டும் இறுதி செய்யப்படும் என்று நஜம் சேத்தி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai